செம ஸ்ட்ராங்காய் நிற்கும் ராஜஸ்தான்; வீழ்த்துமா கொல்கத்தா?
அரபு அமீரகத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ஆட்டத்திலுமே 200க்கும் மேல் ரன் சேர்த்து சிறப்பாக விளையாடியுள்ளது. கடந்த இரு ஆட்டங்களிலும் கேப்டன் ஸ்மித்தும், சஞ்சு சாம்சனும் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர், கடந்த ஆட்டங்களில் ராகுல் தெவாட்டியா ஆல்ரவுண்டராக சிறப்பாக ஆடியுள்ளார். ஆர்ச்சர் தவிர்த்து மற்றவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை கொடுப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் கடந்த இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் இன்னும் 60 ரன்கள் எடுத்தால் மொத்த ஐபிஎல் ரன்ரேட் 1000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இயான் மோர்கனும், பேட் கம்மின்ஸும் அணிக்கு நம்பிக்கையாக உள்ளனர். மற்றப்படி பந்துவீச்சிலும் நைட் ரைடர்ஸ் அணி அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.