திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (20:06 IST)

'இந்திய கிரிகெட் வீரர் 'ரிஷப் பன்டை அறைவேன்''- கபில்தேவ் பேச்சால் சர்ச்சை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை அறைவேன் என்று  கபில்தேவ் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஆண்டு தொடக்கத்தில்,  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

இதில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டினார்.

இதையடுத்து அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தொடர்ந்து 18 மாத காலம் தொடர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதியாகத் தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,கிரிக்கெட் வர்ணனையாளருமான கபில்தேவ், காயங்களில் இருந்து மீண்டவுடன்  ரிஷ்ப் பாண்டை அறைய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை அறையும் உரிமை பெற்றோர்க்கு உள்ளது. அதேபோல், ரிஷப் பாண்ட் காயங்களில் இருந்து குணமடைந்தால், அவரை அறைவேன். அவர் இல்லாதது இந்திய அணியைச் சிதைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்டை அறைவேன் என்று  கபில்தேவ் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.