வியாழன், 11 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2025 (12:39 IST)

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 25ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு உடலுக்குள் ரத்தக்கசிவு தொடர்ந்து வருவதால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K