ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (09:24 IST)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல வழி இருக்கிறதா?

ஆண்டுதோறும் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோத, நியுசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அணி இன்னும் முதல் இரண்டு இடங்களுக்குள் வரவில்லை.

இந்நிலையில் அடுத்து பங்களாதேஷுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கிலும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளை வென்றால் மட்டுமே இந்திய அணி முதல் இரண்டு இடங்களுக்குள் சென்று இறுதிப் போட்டியில் விளையாட முடியும்.