வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:49 IST)

சீனாவின் அத்துமீறல்.. முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை!

Rajnath
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவில் நுழைய முயற்சித்ததை அடுத்து இன்று முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கடந்த 9ஆம் தேதி இந்திய சீன வீரர்கள் மோதிக் கொண்ட நிலையில் இந்திய வீரர்கள் 15 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் எல்லையில் சீனப் படைகள் மோதலில் ஈடுபடுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை நடந்து வருகிறது 
 
இந்த ஆலோசனையில் சீன எல்லை விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக மேலும் சீன வீரர்கள் இனி இந்திய எல்லைக்குள் நுழைந்தால் எடுக்கவேண்டிய அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva