1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bumrah becomes the second Indian to No 1 player in all three formats

கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைக்கும் ஒரே இந்திய வீரர் பும்ராதான்!

டெஸ்ட் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பௌலர் பும்ரா 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, மூன்றாவது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை எட்டியுள்ளார். ஏற்கனவே டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை அவர் ஏற்கனவே வகித்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்பர் 1 வீரராக இருந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சப்போர்ட்டுக்கு யாரும் வரமாட்டாங்க… வாழ்த்து சொல்ல எல்லோரும் வருவாங்க – மும்பை இந்தியன்ஸை தாக்கி பும்ரா பதிவு!