1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. England players went to UAE for rest

தொடருக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

டெஸ்ட் போட்டி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமனில் உள்ளது.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவிட அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவர்கள் அங்குள்ள மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் மீண்டும் இந்தியா வந்து சேர்வார்கள் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
RCB –க்கு பலம் சேர்க்க அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?