1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Test bowlers rankings: Bumrah tops!

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை: பும்ரா முதலிடம்!

Test bowlers rankings
ஐசிசி டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியா-  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2 வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று இரு அணியும் சம  நிலையில் உள்ளன.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2  டெஸ்ட் மற்றும் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,  ஐசிசி  கவுன்சில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அஸ்வினை பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம்  3 வது இடத்தில் இருந்த பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் ரபடா  2 வது இடத்தில் உள்ளார்.  அஸ்வின் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார்… ஆனால்?- ரிக்கி பாண்டிங் கொடுத்த அப்டேட்!