வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (14:07 IST)

அந்த பையன இயல்பான ஆட்டத்த விடுங்கப்பா... ஜெய்ஸ்வால் குறித்து கம்பீர் கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் 9 நாட்களுக்குப் பிறகு நடக்க உள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். கவாஸ்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோருக்குப் பிறகு மிகக்குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதையடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வால் குறித்து தற்போது பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கம்பீர் “அவரின் சாதனைக்காக நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன். ஆனால் அந்த இளைஞனை விளையாட விடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சிறப்பாக விளையாடும் ஊடகங்கள், அவர்களை ஹீரோக்கள் போல் காட்டி, அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி பேசும் பழக்கம் உள்ளது. இதனால் அவர்கள் மேல் எதிர்பார்ப்பும் அழுத்தமும் உருவாகிறது. அதனால் அவர்களால் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட முடியாத சூழல் உருவாகிறது” எனக் கூறியுள்ளார்.