1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Brian lara talked about virat kohli batting position

டி 20 உலகக் கோப்பையில் கோலி நான்காவதாக இறங்கவேண்டும்… ஜாம்பவான் வீரரின் அட்வைஸ்!

விராட் கோலி
அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் தற்போது அறிவிகப்பட்டுள்ள அணியில் கோலி இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கோலியும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இதுவரை ரோஹித் ஷர்மா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இருப்பதால் அது சாத்தியமா என தெரியவில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரான பிரையன் லாரா இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பற்றி பேசியுள்ளார். அதில் “சூர்யகுமார் யாதவ்வை மூன்றாவதாக இறங்கவிட்டு கோலி நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்றால் அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாகிவிடுவார்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்னுடைய அதிரடி ஆட்டத்துக்கு யுவ்ராஜ் சிங்தான் காரணம்…. SRH அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா!