58 பந்துகளில் மேட்சை முடித்த ஐதராபாத்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் லக்னோ அணி கொடுத்த இலக்கை வெறும் 58 பந்துகளில் விக்கெட் இழப்பு இன்றி ஹைதராபாத் முடித்ததை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் உயர்ந்துள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 166 என்ற எளிய இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்ட் ஆகிய இருவரும் சரமாரியாக பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சர்களுக்கும் விளாசினர். இதனை அடுத்து 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் அடித்தனர். டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva