வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (14:29 IST)

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

rahul gandhi
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம் என்றும் ஏழை பெண்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம் என்றும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் மூன்றாவது கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை தெரிந்தது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி ’ஏழைகள் பின்தங்கியவர்கள் பழங்குடியினர் உரிமையை பறிப்பதற்கு பாஜக திட்டமிடுவதாகவும் அரசியல் அமைப்பை அழிக்கவே நினைக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதி ஆக்குவோம் என்றும் ஏழை பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது இந்த தேர்தல் பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva