வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (11:04 IST)

பேட்டிங்கில் மட்டும் அல்ல, பாட்டில் கேப் சேலஞ்சிலும் யுவி ஸ்டைலே தனி...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், பாட்டில் கேப் சேலஞ்சை, தன் தனித்துவமான ஸ்டைலில் செய்து காட்டியுள்ளார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சேலஞ்சுகள், சமூக வலைத்தளங்களில், ஒவ்வொரு காலகட்டத்திலும் டிரெண்டாகி வருவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ’பாட்டில் கேப்’ சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.

அந்த சேலஞ்சில், பாட்டில் ஒன்று மூடியுடன் இருக்க, அந்த மூடியை காலால் ’கிக்’ செய்து அந்த மூடியை மட்டும் கழற்ற வேண்டும். இந்த சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் பலரும் செய்துவருகின்றனர். முக்கியாக சில பிரபலங்களும் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்,  தன்னுடைய பேட்டிங் ஸ்டைலில், அவருக்கு எரியப்பட்ட பந்தை, தனது பேட்டை வைத்து சரியாக மூடியை குறிப்பார்த்து அடிக்க, அந்த பாட்டிலின் மூடி திறந்துவிடுகிறது.

யுவராஜ் சிங்கின், இந்த சேலஞ்ச் வீடியோ தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் உற்சாகத்துடன் பகிரப்பட்டு வருகிறது.