வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (09:13 IST)

டி20-ல் களமிறங்கும் யுவராஜ் சிங்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், குளோபல் டி20 தொடரின் 2வது சீசனில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மும்பையில் தனது ஓய்வை கண்ணீருடன் அறிவித்த யுவராஜ், ஆழமாக சிந்தித்த பின்னரே ஓய்வு முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.  
 
இதனைத்தொடர்ந்து, யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டி20 தொடர்களில் விளையாட அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தார். ஆனால், பிசிசிஐ இதற்கு எந்த பதிலும் அளிக்காத நிலையில் குளோபல் டி20 தொடரின் 2வது சீசனில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். 
ஆம், கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக யுவராஜ் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 
 
6 அணிகள் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் 4 கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த 2வது சீசன் அடுத்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.