விளையாட சான்ஸ் தாங்க: பிசிசிசி-க்கு யுவராஜ் கடிதம்!

Last Updated: புதன், 19 ஜூன் 2019 (10:08 IST)
போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மும்பையில் தனது ஓய்வை கண்ணீருடன் அறிவித்த யுவராஜ், ஆழமாக் சிந்தித்த பின்னரே ஓய்வு முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 
 
இந்நிலையில், யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் டி20 தொடர்களில் விளையாட அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார். இதன் மூலம் யுவராஜ் டி20 மற்றும் ஐபில் போட்டிகளில் விளையாடுவர் என தெரிகிறது. 
 
மேலும், சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்ததால் டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் யுவராஜ் விளையாடுவாரா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது இனி பிசிசிஐ இது குறித்து என்ன முடிவெடுக்கிறது என பார்ப்போம். 


இதில் மேலும் படிக்கவும் :