1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:21 IST)

ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. இமாலய இலக்கு.. இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிவு..

jaiswal
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 557 ரன்கள் இலக்கு கொடுத்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 40 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் உள்ளது. 
 
மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 430 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில்  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை அந்த அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் என்ற பரிதாபமான நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் எடுத்தார் என்பதும் அவர் 214 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva