1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ben stokes talked about come back to odi cricket

மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? பென் ஸ்டோக்ஸ் பதில்!

இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் தூணாக விளங்கி வருகிறார் ஸ்டோக்ஸ். 50 ஓவர் இறுதிப் போட்டி மற்றும் 20 ஓவர் இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட தன்னை தேர்வுக்குழு அணுகியதாகவும், ஆனால் இப்போதைக்கு அதைப்பற்றி தான் யோசிக்கக் கூட இல்லை என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ஆனால் நாளைக்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்த அடியை என்னால் பார்க்க முடியவில்லை- அக்தர் கவலை!