திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (09:34 IST)

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

தற்போது உலகக் கிரிக்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்காக அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் கடந்த் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் வந்து விளையாடினார்.

பென் ஸ்டோக்ஸ் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட போது   ஆண்டு 16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதிலும் அவரின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

அதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. இப்போது நடக்கவுள்ள மெகா ஏலத்திலும் அவர் தன்னுடைய பெயரை பதிவு செய்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் நடக்கும் மினி ஏலத்தில் அவரால் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரால் ஐபிஎல் விளையாடமுடியாது.