1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. BCCI to introduce new rule in IPL 2023

இம்பேக்ட் ப்ளேயரா?... அப்படின்னா!... ஐபிஎல் அடுத்த சீசனில் புதிய விதி

ஐபிஎல்
ஐபிஎல் அடுத்த சீசனில் பிசிசிஐ விரைவில் ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதற்கான மினி ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது.

அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.
அடுத்த கட்டுரையில்
ரொனால்டோவை அசிங்கமாக பேசிய கொரிய வீரர்? – கால்பந்து மைதானத்தில் பரபரப்பு!