செவ்வாய், 31 ஜனவரி 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:24 IST)

2023 ஐபிஎல் தொடரில் ‘இம்பாக்ட் பிளேயர்’ அறிமுகம்.. ‘இம்பாக்ட் என்றால் என்ன?

IPL
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது டாஸ் போடும்போது மட்டும் 11 வீரர்களுடன் சேர்த்து நான்கு இம்பாக்ட் பிளேயர் பட்டியலை அளிக்கவேண்டும் 
 
ஆட்டத்தின் 14 ஓவர் முடிவதற்குள் ஆடும் லெவனில் உள்ள ஒரு வீரருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயர் யாராவது ஒருவரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் விடுவிக்கப்பட்ட வீரர் மீண்டும் அதே போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐபிஎல் ஆட்டத்தை சுறுசுறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva