வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (16:53 IST)

கோலிக்கு தொடர் ஓய்வு: பிசிசிஐ மாஸ்டர் ப்ளான்...

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ. கோலிக்கு அளிக்கப்படும் தொடர் ஓய்வுக்கு பின்னர் சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கேப்டன் விராட் கோலி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது இந்த ஓய்வு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், ஆகஸ்ட் மாதம் துவங்கும் இங்கிலாந்து டெஸ்டில் சிறப்பாக செயல்படுவதற்காக இந்த ஓய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதாம். சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது. 
 
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த மாதம், ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளது. அதில் அனைத்து வீரர்களும் தங்களது அணிக்காக விளையாட உள்ளனர். இதன் பின்னர் ஆப்கான் தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடி அதன் பின்னர் ஆப்கான் தொடரிலும் விளையாடினால் சிரமமாக இருக்கும் என்ற காரணத்திற்காக கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு, அதோடி ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் கோலி விளையாடவுள்ளாராம். இங்கிலாந்து தொடருக்கு சிறப்பாக செயல்படவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.