1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (14:09 IST)

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா த்ரிஷா?

த்ரிஷா நடிப்பில் இந்த வருடமாவது படம் ரிலீஸாகுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
 
‘மெளனம் பேசியதே’ மூலம் 2002ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆனால், கடந்த வருடம் ஒரு படம் கூட த்ரிஷா நடிப்பில் வெளியாகவில்லை.
 
இந்த வருஷம் கூட ‘ஹே ஜூடு’ என ஒரு மலையாளப் படம் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது. ஆனால், தமிழில் த்ரிஷா நடித்த படம் எப்போது ரிலீஸாகும் என ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 
விஜய் சேதுபது ஜோடியாக தற்போது ‘96’ படத்தில் நடித்துவரும் த்ரிஷாவுக்கு, ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ என 3 படங்கள் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளன.