பிசிசிஐ வெளியிட்ட ஐபிஎல் 2018 பாடல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள 11 வது ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 11 வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியது. இதன்படி முதல் போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஆதிகாரப்பூர்வமான பாடலை பிசிசிஐ வெளியிட்டது. அந்த பாடலை சித்தார்த் பஸ்ருர் தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பாட ராஜீவ் வி.பல்லா இசையமைத்துள்ளார்.