கோலி ஒரு கோமாளி: வம்பிழுக்கும் தென் ஆப்ரிக்க வீரர்...

Last Updated: வியாழன், 15 மார்ச் 2018 (17:52 IST)
இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் அனைத்தும் கோமாளியின் செயல்பாடுகள் போல இருப்பதாக தென் ஆப்ரிக்காவின் சுழல் பந்துவீச்சாளர் கூறியுள்ளார். 
 
இது குறித்து தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 
 
அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு குறித்து நடுவர்கள் ஐசிசியிடம் பல முறை புகார் தெரிவித்தனர். 2வது டெஸ்ட் போட்டியின் போது கோலி பந்தை தரையில் ஆவேசமாக வீசி எறிந்தது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர், கோலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு மைனஸ் புள்ளியும், 25 சதவீதம் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டது. ஆனால், ரபாடாவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவில் கோலியின் நடவடிக்கைகலும் செயல்பாடுகளும் ஒரு கோமாளியை போல் இருந்தது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :