தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!
- ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!
- ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!
- தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி
- வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!
தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடுவிதித்த பிசிசிஐ!
இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.
வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம். இதன்படி அணிகள் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களுக்கான ஊதியம் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது பற்றியும் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு அணியும், யார் யாரையெல்லாம் தக்கவைக்கிறார்கள் என்ற அறிவிப்பை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது.