தொடர்புடைய செய்திகள்
- தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி
- வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!
- 5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!
- உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!
- டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!
உலகக் கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. இதில் விளையாட உலகில் உள்ள அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேசக் கிரிக்கெட் ஆடி சம்பாதிக்கும் பணத்தை இரண்டே மாதங்களில் ஐபிஎல் விளையாடுவதன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மெஹா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை ஒரு போட்டிக்கு 7.5 லட்ச ரூபாயாக பிசிசிஐ உயர்த்தியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் குறைவான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் கூட ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஒரு சீசனில் ஊதியமாக சம்பாதிக்க முடியும்.
அடுத்த கட்டுரையில்