1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:47 IST)

9 நகரங்களில் உலக கோப்பை டி20! – பிசிசிஐ தீவிரம்!

9 நகரங்களில் உலக கோப்பை டி20! – பிசிசிஐ தீவிரம்!
இந்த ஆண்டிற்கான உலக கோப்பை டி20 போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் தீவிரமாக்கி வருகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் உலக கோப்பை டி20 போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 9 நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ளதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.