செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:59 IST)

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் நடராஜன் இடம் பெறாததற்கு இதுதான் காரணம்!

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் பிசிசிஐ அறிவித்துள்ள வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

பிசிசிஐ நேற்று கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது சம்மந்தமான பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டன.

இந்நிலையில் இப்போது நடராஜன் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் வீரர்கள் இடம்பெற வேண்டுமென்றால், குறைந்தது 3 டெஸ்ட் அல்லது 7 ஒருநாள் போட்டி அல்லது 10 டி 20 போட்டிகள் ஆகியவற்றில் ஒன்றாவது முடித்திருக்க வேண்டும். ஆனால் நடராஜனோ இன்னும் அந்த எண்களை தொடாததால் அவர் பெயர் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.