புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (10:33 IST)

விராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளிநாட்டுப் பயணத்தின் போது தொடர் முழுவதும் வீரர்கள் தங்கள் மனைவியோடு தங்க அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் வாரியத்திர்கு கோரிக்கை வைத்தார்.

கிரிகெட் விளையாட்டு வீரர்கள்  வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடும் போது அவர்கள் அவர்தம் மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள் எத்தனை நாட்கள் வரையிலும் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு அமையும்.

இந்நிலையில் நம் பிபிசிஐயின்  விதிப்படி அணியின்  வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகளின் மனைவியர்  வெளிநாட்டு தொடரின் போது அவர்களுடன் தங்குவதற்கு இரண்டு வாரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படு வருகிறது.

எனவே இந்த நடைமுறையை மாற்றி, தொடர்முழுவதும்  வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தது. அதை தற்போது ஏற்றுள்ள வாரியம் இனி வெளிநாட்டு தொடரின் போது முழு தொடருக்கும் வீரர்களின் மனைவியர் தங்க அனுமதி அளித்துள்ளது.