புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (10:36 IST)

ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டி: இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இந்திய அணி

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டது.
 
மலேசியாவில் நடைபெற்று வந்த 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி ஆட்டத்தில் நேற்றைய இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
 
இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் இந்திய அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.