1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (19:58 IST)

பேட்ஸ் மேன்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்...

உலகின் மிக செல்வந்த விளையாட்டு என்று கருதப்படும்  கிரிக்கெட் உலகில் கால்பந்து விளையாட்டிற்கு பிறகு மிக அதிக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதனால் கிரிக்கெட் அணி வீரர்களும் பண மழையில் நனைவது வாடிக்கையாகிவிட்டது.காரணம் இந்த விளையாட்டின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் பேரும் புகழுமே ஆகும்.
கிரிக்கெட்டின் நாட்டாமை எண்ரு வர்ணிக்கப்படும் ஐ.சி.சி. ஒவ்வொரு வாரமும் அணிகள் மற்றும் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில் இந்த வாரத்துக்கான தர வரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதில் நம்ம இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
 
மேலும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
 
பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசைப் படியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதலிடத்திலும்,குல்தீப் யாதப் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.
 
சமீப காலமாக இந்திய அணி தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதல் பத்து இடங்களைப் பிடித்து வருவது வீரர்களின் திறமையே காரணம் . அது தேசத்திற்கும் பெருமை சேர்க்கிறது.