1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bangladesh captain mohammedullah about indian team

இந்திய அணி வலிமையாக உள்ளது- வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா

இந்தியா
முத்தரப்பு டி20 போட்டியில் எங்களுடன் மோதவுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது என வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. 
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இன்று இந்திய- வங்காளதேசம் மோதும் டி20 போட்டி குறித்து வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா பேசியதாவது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒய்வில் இருந்தாலும். தற்போதுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது, மேலும் தற்போதுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடியதால் மிகவும் அணுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என பேசினார். 
அடுத்த கட்டுரையில்
ஆணும் பெண்ணும் எப்படி சமமாகும்? விராத் கோஹ்லியின் அதிர்ச்சி வீடியோ