திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (15:35 IST)

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ஸ்பெஷல்!

ஏர் இந்தியா விமான நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளது.
 
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடும் விதத்தில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு கவுரவம் செய்து கொண்டிருக்கிறது.
 
அந்த வகையில் பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா மகளிர் தினத்தை முன்னிட்டு விமான பெண்களை கவுரவிக்கும் வகையில், சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானத்தை பெண் விமானிகளை வைத்து இயக்கியது. மொத்தம் 182 பயணிகளுடன் பயணித்த அந்த விமானத்தை தீபா, ஷஸ்டியா என்ற இரண்டு பெண் விமானிகள் இயக்கினர். 
 
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏர் இந்தியா நிறுவனம் பெண் விமானிகளை வைத்து விமானத்தை வருவது குறிப்பிடத்தக்கது.