1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Babar azam penaltised for over speed driving

போலீஸிடம் சிக்கி அபராதம் கட்டிய பாபர் ஆசாம்! என்ன காரணம் தெரியுமா?

உலகக்கோப்பை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்த உள்ளார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு வரவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணாத்தில் தனது சொகுசு காரில் அதிவேகமாக சென்றதன் காரணமாக போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கி அபராதம செலுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இன்று நடக்கிறது மூன்றாவது ஒருநாள் போட்டி… ஆஸியை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?