செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:56 IST)

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!

இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின், கோலி, ரோஹித், தவான், கங்குலி மற்றும் டிராவிட் ஆகிய வீரர்கள் மட்டுமே ஒரு ஆண்டில் 5 சதங்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய, அவர் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் வேகமாக முன்னேறி வருகிறார்.

அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 20 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே அவர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி விடுவார்.