1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (07:22 IST)

“சின்ன வயசு ஞாபகங்கள் எல்லாம் இன்னும் ப்ரஷ்ஷா இருக்கு”- உலகக் கோப்பை குறித்து சுப்மன் கில்!

இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதையடுத்து தற்போது நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது பற்றி நெகிழ்வாக பேசியுள்ளார் சுப்மன் கில். அதில் “இது என்னுடைய முதல் உலகக் கோப்பை. அதுவும் இந்தியாவில் நடக்கிறது. இது ஒரு சிறப்பான உணர்வு. சிறுவனாக என்னுடைய உலகக் கோப்பை போட்டிகளைப் பார்த்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.” எனக் கூறியுள்ளார்.