1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (10:54 IST)

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த ஆஸி. அணி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றைய முதல் நாள் முடிவில் 156 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை முடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில் ஹாண்ட்ஸ்கூம்ப் மற்றும் கெமரான் க்ரீன் ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்துள்ளது. அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த இரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.