1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (20:06 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் திணறல்..!

west indies
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் திணறல்..!
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் ரன் எடுக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்தது என்பதும் மார்க்கம் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணி இன்று முதல் இன்னிசை விளையாடி வரும் நிலையில் ஆட்ட நேரம் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் ரைமன் தவர மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை மூன்றாவது நாள் ஆட்டம் தொடர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva