ஆஸ்திரேலியா: தமிழக இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸார்
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரிலுள்ள அப்ரன் ரெயில் நிலையத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் அபரன் பகுதி ரெயில் நிலையத்தில் நேற்று தூய்மை பணி செய்து கொண்டிருந்த ஊழியர் மீது ஒரு நபர் கத்தியால் குத்தினார்.
இதுகுறித்து, மக்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.
இந்த நிலையில், கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, அந்த நபர் பற்றிய போலீஸார் விசாரிக்கையில், கொல்லப்பட்ட நபர் தமிழகத்தை சேர்ந்த ரஹ்மதுல்லா சயது(32). இவர், ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் தங்கிருந்தது கண்டுபிடித்தனர்,. அவர் ஏன் இந்தத் தாக்குதலில் நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.