இலங்கையில் விலைவாசி உயர்வை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்!
இலங்கை நாட்டின் முந்தைய ஆட்சியில் பொருளாதா நெருக்கடியால், அட்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டியது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, புரட்சியில் குதித்தனர். இதனையடுத்து, இந்தியா, சீனா, உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்தன.
அதன்பின்னர், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பின், அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்தார். இது மக்களிடையே ஆத்திரம் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வு உள்ள நிலையில், இந்த விலை உயர்வுக்கு பொதுமக்களுடன், தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஒன்று ஒரு அடையாள வேலை நிற்த்த போராட்டத்தை தொழிற்சங்கள் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.