வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (09:24 IST)

நலநிதி கிரிக்கெட் இடமாற்றம்: ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாக நியமனம்!

Stock Image: Shane Warne and Ricky Ponting
ஆஸ்திரேலிய காட்டுத்தீ விபத்துக்கு நிதி திரட்ட நடைபெறும் நலநிதி கிரிக்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நலநிதி கண்காட்சி கிரிக்கெட் அறிவிக்கப்பட்டது. யுவராஜ் சிங், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இந்த ஆட்டம் நாளை சிட்னியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிட்னியில் நாளை வானிலை மோசமாக இருக்கும் என்பதால் இந்த போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் மோதும் இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு ஷேன் வார்னே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரையன் லாரா, யுவராஜ் சிங், ரிக்கி பாண்டிங், பிரெட்லீ, வாசிம் அக்ரம் உள்ளிட்ட 90ஸ் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாட உள்ளனர்.