புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:09 IST)

தவறை ஒப்புக்கொண்ட கோலி :இந்திய வீரர்களுக்கு அபராதம் –ஐசிசி அதிரடி நடவடிக்கை!

விராட் கோஹ்லி

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்து வீசிய காரணத்துக்காக இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கு பிறகு முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி டெய்லர் மற்றும் லாதம் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் மோசமான பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகியவற்றால் இந்திய அணி இமாலய இலக்கை கோட்டை விட்டது.

போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் ஊதியத்தில் 80 சதவீதத்தையும் இழந்துள்ளனர் இந்திய அணியினர். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்திய அணி ஓவர்களை வீசாததால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த ஒத்துக்கொண்டதால் விசாரணை எதுவும் தேவை இல்லை என சொல்லியுள்ளது.