வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:27 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா??

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,
 
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 28,999-ல் இருந்து ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ.25,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ. 27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.