வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (12:49 IST)

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன்..

சவுரவ் கங்குலி-அவிஷேக் டால்மியா

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன் அவிஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி திகழ்ந்தார். எனினும் அதன் பிறகு அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கான 18 ஆவது தலைவராக மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டாலிம்யாவின் மகன் அவ்ஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் வரை நீடிக்கும்.