தொடர்புடைய செய்திகள்
- யுட்யூபர் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக்ஷீப்… ரி எண்ட்ரி கொடுக்கும் அபிராமி!
- கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்! மருத்துவமனை அறிக்கை..!
- ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
- XBB வகை கொரோனா பாதிப்பு: இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி...
- 68.26 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் எழுந்தது. இதையடுத்து தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்தார். அப்போது அவர் “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட்டு உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
ஆனால் தொடர்ந்து ஒரு வீரராக அணித்தேர்வில் இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதன் பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. உள்ளூர் அணியான டாஸ்மேனியா அணிக்காக விளையாடி வந்த நிலையில் இப்போது அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்