செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (11:21 IST)

ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 699 என்று இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1134 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து தற்போது 1.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வர நிலையில் கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran