வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (14:19 IST)

யுட்யூபர் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக்‌ஷீப்… ரி எண்ட்ரி கொடுக்கும் அபிராமி!

தமிழில் 2000களின் தொடக்கத்தில் பிஸியாக இருந்த நடிகை அபிராமி. அதையடுத்து அவரை தனது விருமாண்டி படத்தில் ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் கமலோடு அவர் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். அந்த படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் பின்னர் அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவர் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படத்துக்குப் பிறகும் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் யுடியூபர் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக்‌ஷீப் எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கி வருகிறார் ராஜ்மோகன். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.