திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (08:09 IST)

XBB வகை கொரோனா பாதிப்பு: இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி...

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு XBB வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
XBB வகை கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் செயற்கை ஆக்சிஜன் மூலம் தான் அவர் சுவாசம் செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva