செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (11:12 IST)

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்… அஸ்வின் படைக்க போகும் சாதனைகள் லிஸ்ட்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்களும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் அஸ்வின். கிரிக்கெட் விளையாடிவரும் வீரர்கள் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் அஸ்வின்.

இதையடுத்து அவர் அடுத்து நடக்கவுள்ள கான்பூர் டெஸ்ட்டில் சில சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. அவை என்னென்னவென்று பார்க்கலாம்.
  • கான்பூர் டெஸ்ட்டில் இந்தியா முதலில் பேட்செய்யும் பட்சத்தில் நான்காவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், நான்காவது இன்னிங்ஸில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைப்பார்.
  • கான்பூர் டெஸ்ட்டில் அஸ்வின் 7 விக்கெட் வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய நாதன் லயனின் சாதனையை சமன் செய்வார். அஸ்வின் 180 விக்கெட்கள் வீழ்த்தியிருக்க, லயன் 187 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
  • இந்த டெஸ்ட் போட்டியில் எதாவது ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷேன் வார்னேவை முந்தி இரண்டாம் இடத்துக்கு செல்வார்.
  • இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தினால் வங்கதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை ஜாகீர் கானிடம் இருந்து பெறுவார். ஜாகீர் கான் 31 விக்கெட்களோடு முதலிடத்தில் உள்ளார்.