1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant talked about why he set field

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

Ravichandran Ashwin
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னனி பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியபோது பேட்டிங்கில் சதமடித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றியும்  அசத்தினார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் கம்பேக் கொடுத்த பண்ட், தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். இந்த போட்டியில் அவர் பேட் செய்யும் போது பங்களாதேஷ் வீரர்களை மிட் ஆனில் நிற்க சொல்லி ஃபீல்ட் செட் செய்தது நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது.

அது குறித்து இப்போது பேசிய பண்ட் “நாம் யாருக்கு எதிராக விளையாடினாலும் கிரிக்கெட்டின் தரம் உயர்வானதாக இருக்க வேண்டும் என அஜய் ஜடேஜா சொல்வார். அதனால் தான் மிட்விக்கெட் திசையில் ஆள் இல்லாததாலும், எதிர்த்திசையில் இரண்டு பேர் அருகருகே நின்ற இருவரை மாறி நிற்குமாறு நான் சொன்னேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!